திருமூலர்
மூலன் என்னும் பெயர் திரு என்னும் பெயரடை பெற்று, அத்துடன் அர் என்னும் மரியாதை பன்மையும் பெற்று திருமூலர் என ஆயிற்று.
திருமூலர் திருமந்திரம் என்ற நூலை எழுதினார்.சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறை திருமந்திரம்.
இதற்கு தமிழ் மூவாயிரம் என்னும் வேறு பெயரும் உண்டு. இந்நூல் மூவாயிரம் பாடல்களை கொண்டது. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது இந்நூலின் புகழ்பெற்ற தொடராகும்.

குலசேகர ஆழ்வார்
சேர நாட்டில் திருவஞ்சிக் களத்தில் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தார்.
இவர் அருளி செய்த திவ்வியப் பிரபந்தம் பெருமாள் திருமொழி 105பாசுரங்கள். வடமொழியில் முகுந்த மாலை என்ற ஒரு நூலை இயற்றி உள்ளார்.

ஆண்டாள்
ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெரியாழ்வருடைய துளசித் தோட்டத்தில் குழந்தைப்பேறு  இல்லாத பெரியாழ்வாரால்கண்ட எடுக்கப்பட்டவர். அவர் கோதை எனத் திருநாமம் இட்டு வளர்த்து வந்தார்.

ஆழ்வார் இறைவனுக்கு வைத்த மாலையை தம் பெண்ணுக்கு அணிந்தது பெருமானுக்கு உகந்தது அன்று என வருந்த, வடபெருங்கோயிலுடையான் கனவில் தோ ன்[றி, “அம்மாளை தமக்கு உகந்தது என்றும் இனி கோதை சூடிக்களைந்த மாலையே வேண்டும்” எனவும் பணித்தார். எனவே அவர் தம் மகளை எம்பெருமானின் தேவிகளில் ஒருத்தி என நினைத்து ‘ஆண்டாள்' எனவும் திருநாமம் இட்டார். சூடிக் கொடுத்த நாச்சியார் என்றும் அடியார் அழைத்தனர்.

ஆண்டாள் அவதரித்த நாள் நள வருடம், ஆடி மாதம் கூடிய பூர நட்சத்திரத்தில். இக்குறிப்பின் படி ஆண்டாள் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர்.

ஆண்டாள் அருளிய திவ்விய பிரபந்தங்கள் திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும் ஆகும். ‘கோதை தமிழ் ஐயைந்தும்  (5 X 5) ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பது வம்பு' என்பதால் திருப்பாவையின் பெருமை புலப்படும்.

திருப்பாவை 30 பாசுரங்களும் மார்கழி மாதம் கன்னிப் பெண்கள் நல்ல கணவன் வேண்டியும் மழை வேண்டியும் செய்யும் நோன்பு முறைகளை பற்றி கூறுகின்றன.

வானில் வாழுகின்ற தேவர்களுக்கு மறையவர் வேள்வியில் சொரிந்த அவி உணவை காட்டில் திரியும் நரி புகுந்து உண்ணத் தலைப்பட்டால் எப்படி இருக்குமோ அது போலத் திருமாலுக்கென்று தோன்றிய உடம்பை மானிடன் தீண்டுவது பொருத்தமற்றது; தகாதது. எனவே, மனிதர்களைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் உயிர் வாழ மாட்டேன் என்று ஆண்டாள் கூறினார்.

திரிக்கூடராசப்ப கவிராயர்

பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்துள்ள மேலகரம்

ஆதரித்து போற்றியவர் :  சொக்கம்பட்டி சின்னஞ்சாதேவர்

மதுரையை ஆண்ட முத்து விசயரங்க நாயக்கரால் பாராட்டப்பெற்றார். இவருக்கு ‘திருக்குற்றால கோயில் வித்துவான்'  என்ற சிறப்புப் பட்டம் சூட்டப்பட்டது.

இயற்றிய நூல்கள் : குறவஞ்சி நாடகம் , தல புராணம், அந்தாதி மாலை, உலா, பிள்ளைத்தமிழ், திருக்குற்றாலக் கோவை,  திருக்குற்றாலக் குறவஞ்சி
காலம் : 18-ஆம் நூற்றாண்டு.

இராமலிங்க அடிகள்
பிறந்த ஊர் : மருதூர் (சிதம்பரம்)

பெற்றோர் : இராமையா பிள்ளை, சின்னம்மையார்

சிறப்புப்பெயர் : ஓதாது உணர்ந்த பெருமான், திருவருட் பிரகாச வள்ளலார்.
சமரச சன்மார்க்க நெறியை பரப்பினார்.

வடலூரில் நிறுவிய அமைப்புகள் :  சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், சத்திய ஞான சபை, சத்திய தருமசாலை.

ஜீவகாருண்ய ஒழுக்கம்,  மனுமுறைகண்ட வாசகம் ஆகிய நூல்களை எழுதினார். இவை அனைத்தும் திருவருட்பா என தொகுக்கப்பட்டது.

திருவருட்பா  6000 பாடல்களை கொண்டது.

குமரகுருபரர்

குமரகுருபரரின் பெற்றோர் சண்முக சிகாமணிக் கவிராயர்- சிவகாமசுந்தரி அம்மையார்.

பிறந்த ஊர் – திருவைகுண்டம்

காலம் :  கி.பி. 16 ஆம் நூற்றாண்டு.

இயற்றிய நூல்கள் : நீதிநெறி விளக்கம், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், கந்தர்கலி வெண்பா,  மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம்.

தாயுமானவர்

பெற்றோர் : கேடிலியப்பர்-கெசவல்லி அம்மையார்.
மனைவி : மட்டுவார்குழலி
பிறந்த ஊர் : திருமறைக்காடு
காலம் : பதினெட்டாம் நூற்றாண்டு
நூல் : தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
திருச்சிராப்பள்ளி மலைமீது எழுந்தருளியுள்ள இறைவனான தாயுமானவர் திருவாரூரில் பிறந்தமையால் இவருக்கு தாயுமானவர் என பெயர் சூட்டப்பட்டது. தாயுமானவர் நினைவு இல்லம் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரத்தில் உள்ளது.

சுவாமிநாத தேசிகர்
திருசெந்திற்கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர்  ஈசான தேசிகர் என்னும் சுவாமிநாத தேசிகர் ஆவார்.
ஈசான தேசிகர் என்பது அவரது சிறப்பு பெயராகும்.
தாண்டவமூர்த்தி என்பார்க்கு மகனாய் பிறந்தார்.
திருசெந்திற்கலம்பகம் தொண்ணூற்றாறு சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும்.

அண்ணாமலையார்
திருநெல்வேலி மாவட்டம் சென்னிகுளத்தில் பிறந்தார்.
பெற்றோர் : சென்னவர் - ஓவு அம்மாள்.
காலம் : 1861 – 1890
காவடிசிந்து, வீரை அந்தாதி, கோமதி அந்தாதி, வீரை பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
திருச்சியை ஆண்ட விசய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலராக பணிபுரிந்தார்.
 
Top