இந்தியாவின் பண்டைக்கால வரலாறு, இந்திய மக்களின் கலாசாரம், நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரியங்கள் ஆகியவற்றை வெளிபடுத்தும் விதமாகவே இந்திய தேசிய சின்னங்கள் அமைந்துள்ளன. அவைகளை விரிவாக காண்போம்.
தேசிய கொடி
நம் தேசியக்கொடி செவ்வக வடிவமானது.
நம் தேசிய கொடி மூவர்ணங்களை கொண்டது. மேலே காவி நிறம், கீழே பச்சை நிறம், நடுவே வெள்ளை நிறம். அதில் 24 ஆரங்களுடைய தர்மச்சக்கரம்.
காவி நிறம் வீரத்தையும் தியாகத்தையும், பச்சை நிறம் வளத்தையும் நம்பிக்கையையும், வெண்மைநிறம் உண்மை மற்றும் அமைதியையும் குறிக்கும். சக்கரம் அறம் வழுவாத நல்லாட்சியின் சின்னமாகும்.
இது 1947-ம் ஆண்டு ஜூலை 22 – ல் அரசியல் நிர்ணய சபையால் அங்கீகரிக்கப்பட்டது
தேசிய முத்திரை (National Emblem )
சாரநாத்திலுள்ள அசோக தூணின் மேல்பகுதியில் காணப்படும் அசோக சின்னமே நம் நாட்டின் தேசிய சின்னமாகும்.
இதில் நான்கு சிங்கங்கள் நான்கு திசைகளில் பார்த்தபடி உள்ளன.
இதன் அடிபாகத்தில் ஒரு எருதும் குதிரையும் , இந்த இரண்டிற்கும் நடுவில் அசோகா சக்கரமும் உள்ளன.
அதன் கீழ் ‘சத்யமேவ ஜயதே' (வாய்மையே வெல்லும்) என்று பொறிக்கப்பட்டுள்ளது.
‘சத்யமேவ ஜயதே' என்னும் வாக்கியம் முண்டக உபநிடத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
நமது தேசிய சின்னம் 1950 ஜனவரி மாதம் 26 – ம் நாள் இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த தேசிய முத்திரையை மத்திய, மாநில அரசாங்கங்களின் அலுவலக நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
மாநில அமைச்சர்கள், ஆளுநர்கள், குடியரசு தலைவர் ஆகியோர்களின் அதிகார பூர்வ முத்திரை இதுவாகும்.
தேசிய முத்திரை அமைச்சர்கள் பயன்படுத்தும் கடிதங்களில் நீல நிறத்திலும், அதிகாரிகள் பயன்படுத்தும் தாள்களில் சிவப்பு நிறத்திலும் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.
மக்களவை உறுப்பினர் பச்சை நிறத்திலும், மாநிலங்களவை உறுப்பினர் சிவப்பு நிறத்திலும் தேசிய முத்திரையை பயன்படுத்த வேண்டும்.
தேசிய கீதம் (National Anthem)
‘ஜனகணமன' என்று தொடங்கும் இரவீந்திரநாத் தாகூரின் வங்க மொழி பாடல் நம் நாட்டின் தேசிய கீதமாகும்.
இது 1911- ம் ஆண்டு டிசம்பர் 27ல் தேசிய காங்கிரஸ் கல்கத்தா மாநாட்டில் முதன் முதலாக பாடப்பட்டது.
இது 52 வினாடிகளில் பாடி முடிக்கப்பட வேண்டும்.
1950, ஜனவரி 24ல் அங்கீகரிக்கப்பட்டது.
தேசியப் பாடல் (National Song)
பக்கிம் சந்திர சாட்டர்ஜியின் ‘வந்தே மாதரம்' பாடல் நம் இந்தியாவின் தேசியப் பாடல் ஆகும்.
இது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதாகும்.
இது முதன் முதலாக 1896-ம்ஆண்டு கல்கத்தா இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது.
தேசிய நாட்குறிப்பு (National Calendar)
தேசிய நாட்குறிப்பு 1957 – ம் ஆண்டு மார்ச் மாதம் 22 - ந் தேதி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
இதை சக ஆண்டு என கூறுவர்.
இந்த சக ஆண்டின் முதல் மாதம் கி. பி. 78 - ம் ஆண்டு தொடங்கியதாக எடுத்துள்ளோம்.
இது கனிஷ்கர் ஆட்சிக்கு வந்த ஆண்டாகும்.
இந்த சக ஆண்டு ‘இந்தியா கெசட்டு', ‘ஆல் இந்தியா ரேடியோ', ‘தேசிய நாட்குறிப்பு' முதலியவற்றில் உபயோகிக்கப்படுகிறது.
சக ஆண்டிற்கு 12 மாதங்கள்.
தேசிய பறவை - மயில்
தேசிய விலங்கு - புலி
தேசிய மலர் - தாமரை
தேசிய பழம் - மாம்பழம்
தேசிய மரம் - ஆலமரம்
தேசிய விளையாட்டு - ஹாக்கி
தேசிய இசைக்கருவி : வீணை
தேசிய பானம் : தேநீர்
ஆட்சி மொழி: இந்தி